வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 31 ஜனவரி 2019 (15:19 IST)

எனக்கு ஏன் ஓட்டுப்போடவில்லை – கொடுத்தக் காசை திருப்பிக் கேட்ட வேட்பாளர் !

தெலங்கானா மாநிலம், சூரியபேட் மாவட்டம், ஜெய்ரெட்டிகுடம் கிராமத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவரின் கணவர் வீடு வீடாக சென்று பிரச்சனை செய்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஜெய்ரெட்டிகுடம் கிராமத்தில் கடந்த 25-ம்தேதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் இதில் ஹேமாவதி பிரபாகர் என்ற பெண் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.  இவரது கணவரனான பிரபாகர் தன் மனைவி வெற்றிப் பெற வேண்டுமென தன் மனைவி போட்டியிடும் வார்டில் ஒவ்வொரு வீடாகச் சென்று மதுபாட்டிலும், தன் மனைவியின் சின்னமான ஜக்கும் பணமும் கொடுத்து வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில் தேர்தல் நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் அவரது மனைவி வெறும் 24 வாக்குகளேப் பெற்று தோல்வியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஹேமாவதியின் கணவர் பிரபாகர் வீடு வீடாக சென்று தான் கொடுத்தப் பணத்தைத் திரும்பக் கேட்டுப் பிரச்சனை செய்துள்ளார்.

இதற்காக வினோதமான முறை ஒன்றைக் கையாண்டுள்ளார் பிரபாகர். தட்டில் அட்சதையை எடுத்துக்கொண்டு வீடு வீடாக சென்று என் மனைவிக்குதான் ஓட்டுப் போட்டேன் என சத்தியம் செய்யுங்கள் அல்லது எனதுப் பணத்தைத் திருப்பிக்கொடுங்கள் எனக் கூறியிருக்கிறார். பொய் சத்தியம் செய்யப் பயப்பட்ட மக்கள் அவரிடம் பணத்தைத் திருப்பிக் கொடுத்து வருகின்றனர்.