புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 31 ஜனவரி 2019 (12:22 IST)

கடைவீதியில் கத்தியுடன் உலாவரும் மர்ம நபர்: பீதியில் பொதுமக்கள்

கன்னியாகுமரியில் மர்ம நபர் ஒருவர் கத்தியுடன் வலம் வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
 
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக நள்ளிரவில் மர்மநபர்கள் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
 
இந்நிலையில் இரணியல் கடைவீதிகளில் நள்ளிரவில் ஒரு மர்மநபர் கையில் கத்தியுடன் வலம் வருகிறார். ஒரு கடைக்கு சென்று அந்த கடையின் பூட்டை கத்தியால் அறுக்கிறார். இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த மர்ம நபரால் மக்கள் நள்ளிரவு வெளியே செல்ல பயப்படுகின்றனர். 
 
சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.