1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 14 மே 2018 (16:43 IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை ; தாயே உடந்தை : அதிர்ச்சி செய்தி

சினிமா தியேட்டரில் 10 வயது சிறுமியிடம் பாலியல் செய்கையில் ஈடுபட்ட கேரள தொழிலதிபர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
நாடெங்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, 3 வயது முதல் 13 வயது வரையிலான சிறுமிகள் பாலியல் இச்சைக்கு பலியாகும் செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
 
இந்நிலையில்தான், சமீபத்தில் 10 வயது சிறுமியிடம் பாலியல் செய்கையில் ஈடுபட்ட ஒரு தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, தனக்கு அருகில் அந்த சிறுமியை அமரவைத்து அவர் அந்த செய்கையில் ஈடுபடுவது கேமராவில் பதிவாகியுள்ளது. அப்போது, அவருக்கு அருகில் ஒரு பெண் இருப்பதும், அந்த தொழிலதிபரின் செயலை அவர் கண்டும், காணாமல் இருப்பது போலவும் இருந்தது. அந்த பெண் பார்ப்பதற்கு அந்த சிறுமியின் தாயைப் போலவே காணப்பட்டார்.
 
விசாரணையில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சினிமா திரையரங்கில், திரையரங்க உரிமையாளர் அந்த செய்கையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதேபோல் அவரின் அருகில் இருந்தது, அந்த சிறுமியின் தாய் என்பதும், பணம் மற்றும் வசதிக்காக இதை அவர் அனுமதித்துள்ளர் என்ற அதிர்ச்சியான உண்மை தெரிய வந்தது. 
 
எனவே, அந்த தொழிலதிபரோடு, அந்த பெண்ணையும் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிலதிபர் தங்கியுள்ள குடியிருப்பு பகுதியில்தான் அப்பெண்ணும் வசித்து வருகிறர். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, தனது மகளை தொழில் அதிபருக்கு அவர் விருந்தாக்கியுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.