போலீஸ் ஸ்டேஷன் போகாமல் புகார் கொடுத்து எஃப்ஐஆர் காப்பி வாங்கலாம்...
பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கும் மற்ற காவல் காவல்துரை அலுவலகங்களுக்கும் நேரில் செல்லாமல் ஆன்லைன் மூலம் புகார் பதிவு செய்து அதற்கான எஃப்ஐஆர் காப்பியை பெரும் வசதி தற்போது கேரளாவில் கொண்டுவரப்பட்டுள்ளது.
புகார் அளிப்பது மட்டுமின்றி மற்ற சேவைகளையும் ஆன்லைனில் பெறும் வகையில், புதிய சிட்டிசன் ஆப் கேரள முதல்வர் பினராயி விஜயனால் துவங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆப் மூலம் அனைத்து காவல் நிலையங்களிலும் ஆன்லைனில் புகார் அளிக்க முடியும், மேலும், ஆன்மைன் புகார் மீதான நடவடிக்கை குறித்தும் அறிய முடியும்.
காவல் நிலையத்துல் பதிவு செய்த வழக்குகளின் எஃப்ஐஆர் காப்பி, காவல் துறையிடம் இருந்து பெற வேண்டிய சரிபார்ப்பு சான்றிதழ் ஆகியவையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ளாம்.
அதோடு, பிற சேவைகளாக சந்தேகத்துக்குரிய நிகழ்வுகள் குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தல், காணமல் போனவர்கள் குறித்து குறிப்புகள் அளித்தல் ஆகியவையும் இந்த ஆப்பில் உள்ளது.
இதுமட்டுமின்றி வாகனம் ஏதேனும் குற்ற செயலில் தொடர்புடையதா என்றும், வாகனம் எந்த ஒரு வழக்கிலும் சம்மந்தப்படவில்லை என தடையில்லா சான்று பெற விண்ணபிக்கவும் இது உதவுகிறது.
மேலும், காவல் துறையை பற்றி கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். காவல்துறையினர் குறுஞ்செய்தி, இமெயில் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அளிக்கவும் இது பயன்படுகிறது.