புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 21 டிசம்பர் 2020 (19:19 IST)

மம்தா கட்சியில் இணைந்ததால் மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பாஜக எம்பி!

மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பாஜக எம்பி!
தமிழகத்தைப் போலவே மேற்கு வங்க மாநிலத்திலும் அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தமிழகத்தை போலவே மேற்கு வங்க மாநிலத்திலும் தீவிர கவனத்தை செலுத்தி வருகிறது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழகத்தை பொருத்தவரை அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் அக்கட்சிக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் தனது எதிரி திமுக தான் என்பதையும் பாஜக உறுதி செய்துள்ளது ஆனால் அதே நேரத்தில் மேற்கு வங்காளத்தில் மிகவும் செல்வாக்காக உள்ள மம்தா பானர்ஜி கட்சியை தனியாக எதிர்க்க வேண்டிய சூழ்நிலையில் பாஜக உள்ளது
 
இதனை அடுத்து வழக்கம்போல எதிரிக்கட்சியை உடைக்கும் பணியை பாஜக செய்து வருகிறது என்பதும் ஏற்கனவே 4 மம்தா பானர்ஜி கட்சியின் எம்எல்ஏக்கள் பாஜகவினர்களால் வெளியேறி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பாஜகவின் இந்த செயலுக்கு பதிலடியாக பாஜக எம்பி செளமித்ரா கான் என்பவரின் மனைவி திடீரென மம்தா பானர்ஜி கட்சியில் இணைந்தது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமித்ஷாவுக்கு பதிலடியாக இந்த சம்பவம் என மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் பதிலடியாக மம்தா பானர்ஜி கட்சியில் இணைந்த தனது மனைவியை பாஜக எம்பி செளமித்ரா கான் விவாகரத்து செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
 
அடுத்தடுத்த திருப்பங்கள் உள்ள காட்சிகள் மேற்குவங்கத்தில் அரங்கேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது