பிரபல முன்னணி நடிகருக்கு கொரோனா தொற்று...ரசிகர்கள் சினிமா துறையினர் அதிர்ச்சி
கொரோனா வைரஸ் பரவல்தாக்கம் தற்போது ஓரளவுக்குக் குறைந்துள்ளது. ஆனாலும் சாதாரண மக்கள் முதற்கொண்டு பல்வேறு பிரபலங்கள்வரை பலரும் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகரும் பாஜக எம்பியுமான சன்னி தியோலுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்,தற்போது இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள அவரை மும்பைக்குக் கொண்டு வந்து சிகிச்சை மேற்கொள்ள அவரது உறவினர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
சன்னி தியோலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் அவர் நலம்பெற வேண்டிப் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.