வைரலான விவாகரத்து விவகாரம்: டிரெண்ட் லிஸ்டில் #MelaniaTrump!!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 9 நவம்பர் 2020 (10:24 IST)
சமூக வலைத்தளமான ட்விட்டரில் #MelaniaTrump என்ற ஹேஷ்டேக் தற்போது டிரெண்டாகி வருகிறது. 
 
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் தோல்வியடைந்த நிலையில் அவரது மனைவி மெலனியா அவரை விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பிடன், குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப்பை விட அதிக வாக்குகள் பெற்று அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
 
இந்த அதிர்ச்சியிலிருந்தே ட்ரம்ப் தரப்பினர் மீளாத சூழலில் மேலும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளார் மெலனியா ட்ரம்ப். டொனால்டு ட்ரம்ப்பின் தோல்வியை தொடர்ந்து அவரை விவாகரத்து செய்ய மெலனியா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
மெலனியாவின் அதிகாரிகள் சில கூறுகையில் ட்ரம்ப், மெலனியா இடையே ஏற்கனவே பிணக்கு இருந்து வருவதாகவும் வெள்ளை மாளிகையிலேயே இருவரும் தனித்தனி அறைகளில் வசித்து வருவதாகவும் கூறியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 
 
இந்நிலையில் தேர்தலை விட இவர்களது விவாகரத்து விவகாரம் மக்களுக்கு ரூசிகரத்தை கொடுத்துள்ளது போல. இதனால் தற்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் #MelaniaTrump என்ற ஹேஷ்டேக் தற்போது டிரெண்டாகி வருகிறது. அதோடு மெலனியா, ட்ரம்ப்பை தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
செய்திகளில் பல தகவல்கள் வெளியானாலும் இது குறித்து இன்னும் ட்ரம்ப் - மெலனியா எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :