அமித்ஷாவுக்கு மம்தா பானர்ஜி பதிலடி: திரிணாமுல் கட்சியில் பாஜக எம்பியின் மனைவி

mamthabanarji
திரிணாமுல் கட்சியில் பாஜக எம்பியின் மனைவி
siva| Last Updated: திங்கள், 21 டிசம்பர் 2020 (14:44 IST)
தமிழகத்தை போலவே மேற்கு வங்காளத்திலும் ஆட்சியைப் பிடிக்க பாரதிய ஜனதா கட்சியை பல்வேறு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. குறிப்பாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியில் இருந்த 4 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து அக்கட்சியிலிருந்து விலகி உள்ளனர் என்பதும் அவர்கள் விரைவில் பாஜகவில் சேர உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

திரிணாமுல் கட்சியை உடைத்து அந்த கட்சியில் உள்ள முக்கிய பிரபலங்களை இழுப்பதில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் இவ்வாறு கட்சி உடைக்கும் பணியை வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கும் அமித்ஷாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையாக மம்தா பானர்ஜியும் அதிரடியாக ஒரு ஒன்றை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பாஜக எம் செளமித்ரா கான் என்பவரின் மனைவி திடீரென மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இணைந்து உள்ளார். பாஜக எம்பியின் மனைவியையே தனது கட்சிக்கு இழுத்து அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது மட்டுமின்றி இதேபோல் பாஜக எம்பிக்களையும் தங்களால் இழுக்க முடியும் என்று அவர் மறைமுகமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பாஜகவிடம் சரணடையும் கட்சி மம்தா பானர்ஜியின் கட்சி அல்ல என்றும் பதிலடி கொடுக்கும் கட்சி என்றும் அக்கட்சியின் தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்


இதில் மேலும் படிக்கவும் :