செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 1 ஜூன் 2023 (13:21 IST)

ஹிங்லஜ் மாதா கோயில் தூண்களுக்கு இடையே சிக்கிய பாஜக எம்.எல்.ஏ

dilip makwana
பலுசிஸ்தானில் உள்ள ஹிங்லஜ் மாதா கோயில் தூண்களுக்கு இடையே பாஜக எம்.எல்.ஏ திலீப் மக்வானா சிக்கிக் கொண்டார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

பலுசிஸ்தானில் உள்ள பிரசித்தி பெற்ற  ஹிங்குலா தேவி, ஹிங்லஜ் தேவி மற்றும் நானி மந்திர் என்று அழைக்கப்படும் ஹிங்லஜ் மாதா கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.

இது பக்தர்களின் தீவிர வழிபாட்டுத்தலமாக உள்ளது. மிக சக்தி வாய்ந்த தெய்வம் என்று மக்கள் நம்புவதால், இங்கு அதிகளவில் பக்தர்கள் வந்து மாதாவை வணங்கி தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில்  பலுசிஸ்தானில் உள்ள ஹிங்லஜ் மாதா கோயில் தூண்களுக்கு இடையே பாஜக எம்.எல்.ஏ திலீப் மக்வானா சிக்கிக் கொண்டார்.

இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.