போதைப் பொருள் கடத்திய பாஜக நிர்வாகி கைது!
ஏற்கனவே பல குற்றவாளிகள் கொலையாளிகள் பாஜகவில் இணைந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது போதைப் பொருள் கடத்தியதாக பாஜக நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொல்கத்தாவில் 100 கிராம் கொகை என்ற போதைப்பொருள் கடத்தியதாக பமேலா கொஸ்வாமி என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மேற்குவங்க மாநில பாஜக இளைஞரணி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது
போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பமேலா கொஸ்வாமியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேற்குவங்கத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் பாஜகவின் பெயரை கெடுக்கும் வகையில் அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது