1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (18:20 IST)

5 ரூபாய்க்கு மதிய உணவு: மேற்குவங்க முதல்வர் அதிரடி!

5 ரூபாய்க்கு மதிய உணவு: மேற்குவங்க முதல்வர் அதிரடி!
தேர்தல் நடைபெறும் நேரங்களில் மட்டும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மாறி மாறி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருவார்கள் என்பது தெரிந்ததே 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தமிழக அரசும் எதிர்க்கட்சியும் பல்வேறு சலுகைகளையும் வாக்குறுதிகளையும் வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் அந்த வகையில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கத்திலும் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாறி மாறி சலுகைகளை அறிவித்து வருகிறது 
 
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். 5 ரூபாய்க்கு மதிய உணவு என்ற சூப்பர் திட்டத்தை அம்மாநில மக்கள் வரவேற்று உள்ளனர் 
 
ஏற்கனவே தமிழகத்தில் அம்மா உணவகம் மூலம் சலுகை விலையில் உணவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை பின்பற்றி தற்போது மேற்கு வங்கத்திலும் 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது