திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 21 மார்ச் 2022 (17:17 IST)

மணிப்பூர் முதலமைச்சருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த இல.கணேசன்!

மணிப்பூர் முதலமைச்சருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த இல.கணேசன்!
மணிப்பூர் முதலமைச்சராக பதவியேற்ற பைரன் சிங் அவர்களுக்கு அம்மாநில கவர்னர் இல கணேசன் பிரமாணம் செய்து வைத்தார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 
 
சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் மணிப்பூர் மாநிலம் ஒன்று என்பதும் இந்த மாநிலத்தில் பாஜக அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் மணிப்பூர் மாநில முதலமைச்சராக பைரோன் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அம்மாநில கவர்னர் இல கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் 
 
முதலமைச்சர் உடன் 5 அமைச்சர்கள் பொறுப்பேற்று கொண்டதாகவும் அவர்களுக்கும் ஆளுனர் இல கணேசன் பதவி ஏற்பு மற்றும் உறுதிமொழி செய்து வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது