1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 31 மே 2024 (21:22 IST)

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை சஸ்பென்ட் ரத்து.. முதல்வர் தலையிட்டாரா?

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை பணியிடை நீக்கத்தை ரத்து செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பணி ஓய்வு பெறுவதற்கு ஒருநாள் முன்பாக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தார். காவல் மரணத்தில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரைக்கு தொடர்பு என விசாரணை முடிவு வந்ததால் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 
கடந்த 2013ம் ஆண்டு சிவகங்கையில் காவல் நிலைய மரண வழக்கில் விசாரிக்கப்பட்ட நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சிபிசிஐடி விசாரணையில் தன் மீது தவறு ஏதும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக வெள்ளத்துரை தரப்பு விளக்கம் அளித்துள்ளது. 
 
இதனையடுத்து சஸ்பெண்ட் நடவடிக்கை சர்ச்சையான நிலையில் உத்தரவை ரத்து செய்து உள்துறை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டதால் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva