1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:08 IST)

ரூ.20 கோடிக்கு நாய் வாங்கிய பெங்களூரு தொழிலதிபர்!

dog
ரூ.20 கோடிக்கு நாய் வாங்கிய பெங்களூரு தொழிலதிபர்!
பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் ரூபாய் 20 கோடிக்கு காகேசியின் ஷெப்பர்டு என்ற இன நாய் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் பணக்காரர்கள் அலாதி பிரியம் வைத்திருப்பார்கள் என்பதும் அதற்காக ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதும் தெரிந்ததே.
 
இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ.20 கோடிக்கு செல்லப்பிராணி நாய் வாங்கியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
20 கோடிக்கு காகேசியின் ஷெப்பர்டு இன நாயை அவர் வாங்கி உள்ளதாகவும் ஒன்றரை வயதுடைய அந்த நாயை அவர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளதாகவும் தெரிகிறது
 
திருவனந்தபுரத்தில் நடந்த நாய் கண்காட்சியில் இந்த வகை நாயை பார்த்ததிலிருந்து அந்த நாயை வாங்க வேண்டும் என்று தனக்கு விருப்பம் ஏற்பட்டதாக கூறினார். மேலும் இந்த நாயை ஏசி அறையில் வைத்து வளர்க்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran