புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2023 (13:35 IST)

திடீரென இறங்கிய அமேசான் நிறுவனத்தின் பங்கு.. ஒரே நாளில் ரூ.5000 கோடி நஷ்டம்

Amazon
திடீரென அமேசான் நிறுவனத்தின் பங்கு இறங்கியதால் அந்நிறுவனத்திற்கு ஒரே நாளில் 5 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் என்று கூறப்படுகிறது. 
 
அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 18,000 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சமீபத்தில் தகவல் கசிந்தது. இந்த தகவல் காரணமாக நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் அமேசான் நிறுவனத்தின் பங்குகள் பயங்கரமான இறங்கியது
 
இதன் காரணமாக அந்நிறுவனத்திற்கு ஒரே நாளில் 75 மில்லியன் டாலர் இழப்பு என்றும் அது இந்திய மதிப்பில் சுமார் 5000 கோடி என்றும் கூறப்படுகிறது. உலக பணக்கார வரிசையில் ஆறாவது இடத்தில் இருந்து அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஜாஸ் சொத்து மதிப்பு குறைந்து உள்ளதை அடுத்து அவர் மேலும் பின்னுக்கு தள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அமேசான் நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களில் இந்தியாவை சேர்ந்தவர்களும் இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva