ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (10:15 IST)

பிராமணர் என்பதற்கு பெருமை கொள்ளுங்கள்: தனியார் நிறுவன பெண் சி.இ.ஓ பதிவு..!

பிராமணர் என்பதற்கு பெருமை கொள்ளுங்கள் என பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சிஇஓ தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த சிஇஓ அனுராதா திவாரி என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில்  பிராமணர் என்று சொல்வதற்கு தயங்கும் நிலை தற்போது உள்ளது, அதனால் பெரும்பாலான பிராமணர்கள் தங்களுடைய முழு பெயரை கூறுவதில்லை.

பிராமணர்களை வில்லன்களாகவும் மோசமான அரசியல்வாதிகளாகவும் சில சமூக ஆர்வலர்கள் சித்தரிக்கின்றனர். பிராமணர்கள் அரசில் எந்த உதவியும் பெறுவதில்லை, அவர்களுக்கு சலுகையும் கிடைப்பதில்லை, இட ஒதுக்கீடு இலவசங்கள் கிடைப்பதில்லை, சொந்த உழைப்பில் உயர்ந்து வருவதில் அவர்கள் பெருமை கொள்ள வேண்டும். அதனால் பிராமணர் என்று பெருமையோடு கூறிக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

மற்ற சமூகத்தினர் தங்களை பெருமையாக கருதுவது போலவே  பிராமணர் என்று சொல்வதிலும் பெருமையாக கருத வேண்டும். அரசியல்வாதிகளும் சமூக நீதியை காப்பாற்றுவதாக கூறுபவர்கள் தான் பிராமணர்களை  தவறாக சித்தரிக்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமர்சியல் பதிவாகி வருகின்றன.

Edited by Siva