ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (09:54 IST)

பேசுபவர்கள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள்… எதிர்மறை விமர்சனங்கள் குறித்து யுவன் பேச்சு!

தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இசையமைப்பாளர் ஆனவர் யுவன் ஷங்கர் ராஜா. அவர் தன்னுடைய 16 ஆவது வயதில் அரவிந்தன் என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளர் ஆனார். ஆனால் அவரின் தொடக்கக் காலத்தில் தொடர்ந்து ப்ளாப் ஆகிவந்தன. அதனால் அவர் ராசியில்லாத இசையமைப்பாளர் என முத்திரைக் குத்தப்பட்டார்.

அதுபற்றி சமீபத்தில் பள்ளி விழா ஒன்றில் பேசிய யுவன் “என் ஆரம்பகால படங்கள் பல ஓடவேயில்லை. அதனால் என்னை முத்திரைக் குத்தினார்கள். நான், என் ரூமில் தனியாக அழுதபடி இருப்பேன்.  ஆனால் ஒரு கட்டத்தில் எங்கு தவறு நடக்கிறது என்ற் ஆராய்ந்து அதை சரி செய்து ஒரு இடைவெளிக்குப் பின் இசையமைக்க ஆரம்பித்துதான், இப்போது இருக்கும் இடத்தில் நிற்கிறேன்.

பேசுகிற வாய் பேசிக்கொண்டேதான் இருக்கும். நாம் அதையெல்லாம் கேட்காமல் தலைநிமிர்ந்தபடி சென்று கொண்டே இருக்கும். எதிர்மறை விமர்சனங்களுக்கு என் காது திறந்தபடி இருக்காது. ஆனால் பாசிட்டிவ்வான விஷயங்களுக்கு எப்போதும் என் செவிகள் திறந்தபடி இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.