செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (21:08 IST)

கடற்கன்னி போல் பிறந்த குழந்தை 15 நிமிடங்களில் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடற்கன்னி போன்ற உடல் அமைப்புடன் பிறந்த குழந்தை 15 நிமிடங்களில் உயிரிழந்தது.

 
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திக்‌ஷா கம்பல் என்ற பெண்ணுக்கு இன்று குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் உடலமைப்பு கடற்கன்னியை போன்று இருந்துள்ளது. 
 
ஆனால் குழந்தை பிறந்த 15 நிமிடங்களிலே உயிரிழந்தது. 1.8 கிலோ எடையுடன் பிறந்த அந்த குழந்தையின் கால்கள் இரண்டும் ஒட்டியவாறும், கைகள் மீனின் துடுப்புக்களை போன்று இருந்துள்ளது.
 
அரிதான உடல் வளர்ச்சி குறைபாடு காரணமாக குழந்தை இதுபோன்ற உடலமைப்புடன் பிறந்துள்ளது. சிரேனோமெலியா நோய் தாக்கப்பட்டு பிறந்த அந்த குழந்தையின் உடல் மேல்பாதி மனிதர்களை போலவும் கீழ்பாதி மீனின் உடலமை போலவும் காணப்பட்டுள்ளது.