வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 16 மே 2018 (17:57 IST)

பள்ளி வேன் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 குழந்தைகள் பலி

பீகார் மாநிலத்தில் உயரழுத்த மின்கம்பி அறுந்து சாலையில் சென்ற பள்ளி வேன் மீது விழுந்ததில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

 
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தின் பானியாபுர் பகுதியில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சாலையில் சென்ற பள்ளி வாகனம் மீது உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் வேன் மீது மின்சாரம் பாய்ந்தது.
 
இந்த விபத்தில் 2 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 11 குழந்தைகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3பேர் கவலைகிடமான நிலையில் உள்ளனர்.
 
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.