வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 24 மே 2021 (07:32 IST)

நவீன மருத்துவம் குறித்த கருத்தை வாபஸ் பெற்றார் பாபா ராம்தேவ்!

பாபா ராம்தேவ் நவீன மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை சமீபத்தில் கூறிய நிலையில் அந்த கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சமீபத்தில் பாபா ராம்தேவ் நவீன மருத்துவம் முட்டாள்தனமானது என்று கூறினார். அதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. குறிப்பாக இந்திய மருத்துவ கவுன்சில் பாபா ராம்தேவுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அல்லது நவீன மருத்துவத்தை மூடி விடலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தது.
 
இந்த நிலையில் நவீன மருத்துவம் குறித்து தாம் தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து தற்போது நவீன மருத்துவம் குறித்த தனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார். இதுகுறித்து ராம்தேவின் பதஞ்சலி அறக்கட்டளை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நவீன அறிவியல் மருத்துவத்தை ராம்தேவ் விமர்சிக்கவே இல்லை என்றும், அவர் தெரிவித்த கருத்துகள் அனைத்துமே தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.