நான் தடுப்பூசி போட்டுக்கொள்ள போகிறேன்! – பாபா ராம்தேவ் அறிவிப்பு!
சமீபத்தில் அலோபதி மருந்துகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ் தடுப்பூசி போட்டு கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பதஞ்சலி நிறுவனரான பாபா ராம்தேவ் கொரோனா காலத்தில் அலோபதி மருத்துவம் குறித்து சமீபத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்த இந்திய மருத்துவ சங்கம் பாபா ராம்தேவ் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது பாபா ராம்தேவ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். நவீன மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவிட்டு பாபா ராம்தேவ் தடுப்பூசி போட்டுக் கொள்ள உள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.