கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி; 1.5 கோடி செலவு!
இந்தியாவில் கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் சிகிச்சைக்காக 1.5 கோடி செலவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனாவை தொடர்ந்து கரும்பூஞ்சை தொற்று பரவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. முதன்முறையாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த நவீன் என்பவருக்குதான் கரும்பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா சிகிச்சை பெற்று திரும்பிய இவருக்கு கண்கள் மற்றும் பற்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் மருத்துவர்களிடம் கூறிய போது அவர்களை இதை பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
நாளடைவில் கரும்பூஞ்சை தொற்று அதிகமானதால் நவீனுக்கு இரண்டு கண்களும் அகற்றப்பட்டு உள்ளது. பின்னர் 6 மருத்துவமனைகளில் அவருக்கு பல்வேறு சிகிச்சைகளும், 13 அறுவை சிகிச்சைகளும் நடந்துள்ளது. இதற்காக அவரது குடும்பத்தினர் மொத்தமாக 1.5 கோடி செலவு செய்துள்ளனர்.