சென்னைக்கு வந்தது 85,000 டோஸ்கள் கோவாக்ஸின் தடுப்பூசி!
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக கடந்த சில நாட்களாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. தமிழகத்திற்கு தரவேண்டிய தடுப்பூசிகள் தாமதமாக வந்து கொண்டிருப்பதாகவும் இதனால் தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்து வருகிறது
மேலும் தடுப்பூசி கையிருப்பு குறித்த நிலவரத்தை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என மத்திய அரசு அறிவித்து இருந்தும் தமிழக அரசு தினந்தோறும் தடுப்பூசி குறித்த கையிருப்பு நிலவரத்தை வெளியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக அரசு ஆர்டர் செய்த 85 ஆயிரம் கோவாக்ஸின் தடுப்பூசி சென்னை வந்தடைந்துள்ளன. இந்த தடுப்பூசிகள் விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து அனுப்பப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இருப்பினும் மத்திய அரசு இன்னும் போதுமான அளவுக்கு தமிழகத்திற்கு தடுப்பூசியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது