திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (15:05 IST)

கொரோனா தடுப்பூசி விவரத்தை மக்களிடம் சொல்வதுதான் சரி… அமைச்சர் மா சுப்ரமண்யன் தகவல்!

கைவசம் இருக்கும் தடுப்பூசி உள்ளிட்ட விவரங்களை மக்களிடமோ ஊடகங்களிடமோ தெரிவிக்க வேண்டாம் என ஒன்றிய அரசு கூறியதாக மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்ரமண்யன் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த  அவர் ‘தடுப்பூசிகள் இருப்பு விவரத்தை மக்களிடம் தெரிவிக்கக் கூடாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால் அதை மக்களிடம் சொல்வதுதான் சரியான முடிவு. தற்போது கைவசம் வெறும் 1060 தடுப்பூசிகள்தான் உள்ளன. இன்னும் இரண்டு நாட்களில் தடுப்பூசி வந்ததும் அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்படும்’ எனக் கூறியுள்ளார்.