வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2019 (11:19 IST)

இந்தி ஒரு கலப்பு மொழி: கொந்தளிப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகரின் கருத்து

பா.ஜ.க. அரசின் மும்மொழி கொள்கையை விமர்சித்து பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா கருத்து தெரிவித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தமிழ்நாடு,கர்னாடகா,கேரளா,போன்ற தென் மாநிலங்களில் இந்தி திணிப்பிற்க்கான எதிர்ப்பு குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.மத்திய அரசு பிராந்திய மொழிகளை அழித்தொழிக்கவே இவ்வாறு மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கிறது என்று ஆளும் மோடி அரசின் மேல் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இது குறித்து பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா அவரது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் “உங்களது மொழியை விரும்புவது நல்ல விஷயம்தான். ஆனால் நம்ம மொழி மட்டும்தான் சிறந்தது என்ற எண்ணம் தவறானது மட்டுமல்ல. அது ஆபத்தானதும் கூட. இந்தியை கொண்டு போய் எப்படி தென் இந்தியாவிலும்,நாம் கட்டாயப்படுத்த முடியும்.”
மேலும் அவர் தமிழ் நாட்டின் பாரம்பரியம் கலச்சாரம் பற்றியும் திராவிட மொழியின் பெருமையை பற்றியும் பேசியுள்ளார்.

”தென்னிந்தியாவின் கலாசாரத்தையும் பாரம்பரியதையும் நாம் போற்றவேண்டும். இந்தி அவர்களுக்கு அந்நிய மொழி. அதை அவர்களின் மேல் திணிக்கக்கூடாது, இப்பொழுது நமக்கு தேவை நாட்டின் முன்னேற்றமும் நாட்டின் வளமும் மட்டுமே. அதை விட்டுவிட்டு ஒரு கலாச்சரைத்தை இன்னொரு கலாச்சாரத்தோடு திணிப்பது, பன்மைத்துவமான நாட்டின் ஒற்றுமையை சீற்குலைப்பதே ஆகும்.

வட இந்தியர்களாகிய நாம் ஒரு விசயத்தை புரிந்துகொள்ளவேண்டும், பெர்சிய, அரபு மொழி தாக்கத்தால் உண்டானதே இந்தி மொழி. நீங்கள் சுத்தமான மொழியை பேச வேண்டுமானால் திராவிட மொழிகளைதான் பேச வேண்டும். ஏனென்றால் அது தான் எந்த பிற மொழி கலப்பும் இல்லாத சுத்தமான மொழியாகும். இந்தி ஆங்கிலம் உட்பட 23 மொழிகலையும் நாம் அதிகார பூர்வமாக மதிக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.

இவ்வாறு அவர் சமூக வலைத்தளங்களில் தென்னிந்தியர்கள் மத்தியில் பாராட்டுகளையும் வட இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

பிரபல பாலிவுட் நடிகரான ஆயுஷ்மான் குர்ரானா “படாய் ஹோ’ ‘அந்ததன்’ ‘விக்கி டோனார்’ போன்ற வெற்றிகரமான இந்தி படங்களில் கதானாயகனாக நடித்தவர். இவர் நடித்து ஜூன் மாதம் இறுதியில் வெளிவரவிருக்கும் “ஆர்ட்டிகல் 15” ஒரு சமூகம் சார்ந்த அரசியல் பேசும் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.