செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (16:30 IST)

அத்து மீறிய அசிஸ்டண்ட் ப்ரொஃப்சரை கேம்பஸில் ஓட விட்டு வெளுத்த மாணவர்கள்!

மாணவியிடம் தேர்வறையில் தகாத முறையில் நடந்துக்கொண்ட ஆசிரியரை சக மாணவர்கள் துரத்தி துரத்தி அடித்து வெளுத்துள்ளனர். 
 
தெலங்கானாவின் கரீம் நகர் மாவட்டம் திம்மாப்பூரில் உள்ள ஸ்ரீசைதன்யா பொறியியல் கல்லூரியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த கல்லூரியில் துணைத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 
 
இந்நிலையில் ஆசிரியர் ஒருவர் தேர்வறையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி சக மாணவிகளிடம் அந்த மாணவி கூறியுள்ளார். 
 
உடனே ஆத்திரமடைந்த சக மாணவர்கள் ஆசியரை பிடித்து சரமாரியாக அடித்துள்ளனர். மேலும், அந்த ஆசிரியருக்கு எதிராக கல்லூரி நிர்வாகத்திடமும், காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.