செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (10:30 IST)

மனைவி மேல் சந்தேகம் – குடும்பத்தையே அழித்த கொடூரன் !

மனைவியின் நடத்தை மேல் சந்தேகம் கொண்ட கணவன் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் கொன்றுள்ள சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கும் சாந்தினி என்ற பெண்ணுக்கும் சில வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்துள்ளது. சாந்தினி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் திருமணத்தின் மூலம் சாந்தினிக்கு அயான் என்ற மகன் உள்ளார். பிரவீன் குமாருக்கும் சாந்தினிக்கும் கிறிஸ்டி என்ற மகனும் உள்ளார்.

நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கையில் சாந்தினி நடத்தை மேல் பிரவீன்குமாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால் விரிசல் எழுந்துள்ளது. இதுசம்மந்தமாக சாந்தினியும் பிரவீன்குமாரும் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து சில நாட்களுக்கு முன்னரும் அதுபோல சண்டை வர, தனது வீட்டில் இருந்த தன்னுடையப் பெற்றோர் மற்றும் சகோதரர்களை வெளியே அனுப்பிவிட்டு சாந்தினியை இரும்பு ராடால் தலையில் தாக்கியுள்ளார் பிரவீன்குமார். இதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதையடுத்துத் தனது இரண்டு மகன்களையும் அதே இரும்பு ராடால் தாக்கி கொலை செய்துவிட்டு காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளார். இதுசம்மந்தமாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.