புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 31 ஜூலை 2019 (18:38 IST)

ட்ரம்ப் மூக்கை உடைத்த பேராசிரியர்கள்: அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் செய்த வேலையை பாருங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை மறைமுகமாக பகடி செய்து இரண்டு பேராசிரியர்கள் செய்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவுக்கும், மெக்ஸிகோவுக்கும் இடையே சுவர் எழுப்ப வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். சுமார் 2000 கிலோ மீட்டர் தூரத்திற்கு எழுப்பப்படும் இந்த சுவர் திட்டத்தை அமெரிக்க மக்கள் பலரும் எதிர்த்து வருகின்றனர். ஆனால் ட்ரம்ப் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறார்.

இந்நிலையில் கலிஃபோர்னியாவை சேர்ந்த இரண்டு பேராசிரியர்கள் ட்ரம்பின் கொள்கையை பகடி செய்யும்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறார்கள். அமெரிக்காவையும், மெக்ஸிகோவையும் பிரிக்கும் எல்லைப்பகுதியில் உள்ள கம்பியாலான சுவருக்கு இடையே சீசா எனப்படும் விளையாட்டு பொருளை அமைத்திருக்கிறார்கள். அந்த பக்கம் மெக்ஸிக்கர்களும், இந்த பக்கம் அமெரிக்கர்களும் அதில் அமர்ந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாக வலம் வருகிறது. இது அமெரிக்கர்களுக்கும், மெக்ஸிக்கர்களுக்கும் உள்ள சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவதாக பலர் தெரிவித்துள்ளனர்.