வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 23 மே 2024 (12:28 IST)

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

arvind kejriwal
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் டெல்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமராக மாறுவார் என்றும் அவருடைய மனைவி சுனிதா டெல்லி முதல்வராக பதவியேற்பார் என்றும் சில ஊடகங்களில் செய்து வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தனக்கு பிரதமர் ஆசை இல்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் என்று பேட்டியில் தெரிவித்துள்ளார். 
 
ஆம் ஆத்மி கட்சி மொத்தமே இந்தியாவில் 22 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது என்றும் அதை வைத்துக்கொண்டு பிரதமர் கனவு காண முடியாது என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் ராகுல் காந்தி பிரதமர் என்பதையும் அவர் உறுதி செய்யவில்லை. பிரதமர் வேட்பாளர் குறித்த முடிவை தகுந்த நேரத்தில் எடுப்போம் என்றும் ராகுல் காந்தி பிரதமர்   வேட்பாளரா என்பதை அனைவரும் கூடி முடிவு செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேடம் மீண்டும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்றும் அப்படியே ஆட்சிக்கு வந்தாலும் இனிமேல் இந்தியாவில் தேர்தல் இருக்காது என்றும் தற்போது ரஷ்யாவில் என்ன நடக்கிறது அதுதான் இந்தியாவிலும் நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஆம் ஆத்மி எம்பி சுவாதி மாலிவால் சுமத்திய குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு இந்த விவகாரத்தில் இருவேறு கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது, காவல்துறையினர் முழுமையாக விசாரணை செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்தார்.
 
Edited by Siva