1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 22 மே 2024 (07:19 IST)

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

நான் பார்த்த நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் என்று ராகுல் காந்தி என அவருடைய புகைப்படத்தை தன்னுடைய எக்ஸ் தளத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செல்லூர் ராஜூ அவர்களுக்கு நன்றி என காங்கிரஸ் பிரமுகர் தெரிவித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்வார் என்பதும் அது சில சமயம் சிக்கல் ஏற்படுத்தி விடும் என்பதும் தெரிந்தது. அந்த வகையில் நேற்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் நான் பார்த்து நெகிழ்ந்த இளம் தலைவர் என ராகுல் காந்தியை அவர் புகழ்ந்து பதிவு செய்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் செல்லூர் ராஜு எப்படி காங்கிரஸ் கட்சியின் தலைவரை புகழலாம் என்று அதிமுக நிர்வாகிகள் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செல்லூர் ராஜு பதிவிற்கு பதிலளித்த விருதுநகர் காங்கிரஸ் பிரமுகர் மாணிக்கம் தாகூர் ’அண்ணன் செல்லூர் ராஜூக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில் செல்லூர் ராஜு மீது நடவடிக்கை எடுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது

Edited by Siva