கதவை திறந்து விட்ட மத்திய அரசு - களம் இறங்கும் ஆப்பிள் நிறுவனம்
அந்நிய முதலீட்டில் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள தளர்வுகளால் ஆப்பிள் நிறுவனம் தனது நேரடி ஆன்லைன் விற்பனையை இந்தியாவில் தொடங்க இருக்கிறது.
அந்நிய முதலீடுகளை அதிகரிக்கும் செயல்திட்டம் குறித்து கடந்த புதன்கிழமை பொருளாதார விவகாரங்கள் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதில் சிங்கிள் பிராண்ட் நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்வதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
தற்போது இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியிருப்பதால் சிங்கிள் பிராண்ட் நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யவும், லாபம் பெறவும் முடியும். இதனால் இந்தியாவில் நேரடி ஆன்லைன் விற்பனை மற்றும் விற்பனை மையத்தை தொடங்க உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து ஓப்போ, சாம்சங் நிறுவனங்களும் தங்களது நேரடி விற்பனை மேலாண்மை தளங்களை இந்தியாவில் அமைக்க இருக்கின்றனர்.