சுஸுக்கி நிறுவனத்தில் 3000 பேர் வேலையிழப்பு: சரிவில் ஆட்டோமொபைல்ஸ்

automobiles
Last Modified புதன், 28 ஆகஸ்ட் 2019 (15:55 IST)
கடந்த சில மாதங்களில் ஆட்டோ மொபைல்ஸ் தொழிலில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார சரிவின் காரணமாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை குறைத்து கொள்ள தொடங்கியிருக்கின்றன.

ஆட்டோ மொபைல் தொழில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வாகன உற்பத்திகளை குறைத்து வருகின்றன பிரபல நிறுவனங்கள். ஏற்கனவே டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வாரத்தில் சில நாட்கள் கட்டாய விடுப்பு அளித்து வரும் நிலையில், தற்போது கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுக்கி தன் நிறுவனத்தில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் 3000 பேரின் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் வைத்திருக்கிறது.

ஒப்பந்த காலம் முடிந்ததும் அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என சுஸுக்கி நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். புதிய வாகன உற்பத்தி சட்டங்களும், அதிக வரிவிதிப்புமே ஆட்டோ மொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சிக்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 9 மாதங்களில் ஆட்டோ மொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் 300க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருப்பதாகவும், வாகன விற்பனை பிரிவில் பணிபுரிந்த சுமார் 2 லட்சம் வேலை இழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. வாகனங்களின் உற்பத்தியும், விற்பனையும் கருமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.



இதில் மேலும் படிக்கவும் :