புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By
Last Modified: வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (14:08 IST)

முடிவே இல்லாமல் செல்லும் தங்கம் விலை – 112 ரூபாய் உயர்வு !

தங்கத்தின் விலை இன்று மீண்டும் 112 ரூபாய் உயர்ந்து 29,814 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக பங்குசந்தையில் தொடர்ந்து சரிவுகள் ஏற்பட்டு வருவதால் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த வாரம் தங்கம் விலை உயர்ந்து 29 ஆயிரத்தை தொட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களில் ஒரே நாளில் 640 ரூபாயும் மற்றொரு நாளில் 304 ரூபாயும் உயர்ந்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின் விலை ரூ 112 உயர்ந்துள்ளது. இதன்மூலம் ஒரு கிராம்  3,727 ரூபாய்க்கும்,.சவரன் தங்கம் 29,816 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. ஒரு பவுன் தங்கம் 30,000 ஆயிரத்தைத் தொட இன்னும் 184 ரூபாயே இருக்கிறது.

இந்திய பொருளாதாரம் மந்தநிலையை அடைந்து இருப்பதால் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதனால் தான் தங்கத்தின் விலை அதிகமாகிக்கொண்டே செல்வதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.