திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 1 ஜனவரி 2024 (07:38 IST)

ஒய்.எஸ்.ஷர்மிளாவுடன் இணைந்த ஜெகன் கட்சி எம்.எல்.ஏ: ஆந்திராவில் அனல் பறக்கும் அண்ணன் தங்கை அரசியல்..!

YSR sharmila
ஆந்திர மாநில முதல்வர்  ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா தெலுங்கானாவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில் அவர் திடீரென ஆந்திரா அரசியலிலும் குதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஷர்மிளாவின் கட்சி பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவருக்கு  தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெகன்மோகன் கட்சியின் எம்எல்ஏ ராமகிருஷ்ணா திடீரென  ஒய்.எஸ்.ஷர்மிளா கட்சியில் இணை இருப்பதாகவும் ஷர்மிளா எடுக்கும் முடிவுக்கு தான் கட்டுப்படுவேன் என்று பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் தனது எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில் அவரது ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.  தெலுங்கானாவில் அரசியல் செய்து கொண்டு இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா திடீரென ஆந்திரா அரசியலிலும் குதித்துள்ளது, அண்ணன் தங்கை இடையே பனிப்போர் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva