தாமதமானதா? தாமதம் ஆக்கப்பட்டதா? மத்திய பிரதேச தேர்தல் முடிவு...
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களில் பெரிய மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.
ஆம், மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 114 தொகுதிகளும், பாஜகவுக்கு 109 தொகுதிகளும் கிடைத்துள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க 116 தொகுதிகள் தேவை என்பதால் மூன்று சுயேட்சைகளும், மாயாவதி கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளதால் காங்கிரஸ் அங்கு ஆட்சி அமைக்கின்றது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் தேர்தல் முடிவு இழுபறியாக இருந்து வந்த நிலையில் வேண்டுமென்றே தேர்தல் முடிவுகள் தாமதமாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. இதற்கான காரணங்கள் குறித்து தற்போது தெரியவந்துள்ளது.
மற்ற மாநிலங்கள் போல இல்லாமல், மத்திய பிரதேசத்தில் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறைகளை பின்பற்றியது தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதமானதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
மேலும், எளிதாக முடிக்க வேண்டிய வாக்கு எண்ணிக்கையை பாஜக கட்டாயப்படுத்தியதன் மூலம் தாமதம் செய்து இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதவாது, காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டும் அங்கு மாறி மாறி முன்னிலை வகித்தது.
இதனால் இரவோடு இரவாக பிரச்சனை செய்யும் நோக்கில், முடிவுகளை மாற்றும் வகையில் பாஜக இப்படி செய்தது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது. இந்த பிரச்சனைக்கு எல்லாம் பின்னணியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாதான் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.