இளவரசர் செல்லும் விமானத்தை நிறுத்திய எறும்புகள்?! – டெல்லியில் பரபரப்பு!
டெல்லியிலிருந்து லண்டன் புறப்பட்ட விமானத்தில் எறும்புகள் இருந்ததால் விமானசேவை நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவிற்கு சொந்தமான விமானம் ஒன்று லண்டன் புறப்பட தயாரானது. இதில் பூடான் நாட்டு இளவரசரும் லண்டன் செல்ல இருந்துள்ளார்.
அப்போது விமானத்தில் பிஸ்னஸ் க்ளாஸில் எறும்புகள் பல இருந்ததை கண்ட விமானிகள் அதை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க, பின் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏர் இந்தியா விமான சேவை குறித்து மக்களிடையே பல புகார்கள் உள்ள நிலையில் இந்த சம்பவம் வைரலாகியுள்ளது.