1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 மே 2019 (18:28 IST)

மீண்டும் புதிய ரூபாய் நோட்டுகள் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அரசாங்கம் புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. வெவ்வேறு வண்ணங்களில் 10ரூ, 20ரூ, 50ரூ, 100ரூ, 200ரூ,  500ரூ, 2000ரூ தாள்களை அறிமுகம் செய்திருந்தது. 
 
தற்போது புதிய வடிவிலான 10ரூபாய் நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது. இதில் கவர்னர் சக்திகாந்த தாஸின் கையெழுத்து மற்றும் ‘பாரத்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட செக்யூரிட்டி திரட் இடம்பெற்றிருக்கும். இடது பக்கமாக அச்சிடப்படும் ஆண்டும், ஸ்வச் பாரத் லோகோவும் இடம்பெறும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
மேலும் இந்த புது 10ரூபாய் தாள் வெளியானாலும் எப்போதும் போல பழைய 10ரூபாய் தாள்களும் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.