வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 12 டிசம்பர் 2018 (20:41 IST)

புதிய ரிசர்வ் வங்கி கவர்னருக்கு சுப்பிரமணியம் சுவாமி எதிர்ப்பு

ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேல் திடீரென சமீபத்தில் ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு பதிலாக புதிய கவர்னராக சக்தி கந்ததாஸ் நேற்று மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டார். அவர் வரும் மூன்று ஆண்டுகளுக்கு கவர்னராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சக்தி கந்ததாஸை ரிசர்வ் வங்கியின் கவர்னராக மத்திய அரசு நியமனம் செய்தது தவறு என்றும் அவரை நீக்க வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:  ரிசர்வ் வங்கியின் கவர்னாராக சக்தி கந்த தாஸை நியமனம் செய்தது மத்திய அரசு எடுத்துள்ள தவறான முடிவு. அவருக்கு ப.சிதம்பரத்துடன் நெருக்கம் அதிகம் உண்டு. ப.சிதம்பரம் செய்த பல்வேறு முறைகேடுகளின் நீதிமன்ற வழக்குகளில் இருந்து அவரை காப்பாற்றியவர் சக்தி கந்ததாஸ். எதற்காக அவரை காப்பாற்றினார் என்பது எனக்குத் தெரியாது. மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதி உள்ளேன்' என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னர் குறித்தும் சுப்பிரமணியம் சுவாமி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.