திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 டிசம்பர் 2018 (18:59 IST)

தமிழகத்தில் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேல் நேற்று ராஜினாமா செய்த நிலையில் சற்றுமுன் இந்த பதவிக்கு புதியதாக  சக்தி காந்ததாஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுளார்.

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ள சக்தி காந்ததாஸ் தமிழக தொழில்துறை முதன்மை செயலராக பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த பதவியில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணியாற்றுவார் என்று அவரது நியமன உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக இருந்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி குறித்த மத்திய அரசு எடுக்கவிருந்த சில முக்கிய முடிவுகள் ஒத்தி வைக்கப்படலாம் என கருதப்படுகிறது