திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 மார்ச் 2018 (17:44 IST)

ஏர்செல், ஏர்டெல்லை அடுத்து வோடோபோனுக்கும் சிக்கல்?

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல் திடீரென தனது சேவையை கடன் காரணமாக நிறுத்தி கொண்டதால் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துடன் தற்போது வேறு நிறுவன சேவைக்கு மாறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று திடீரென ஏர்டெல் வாடிக்க்கையாளர்களும் சிக்னல் கிடைக்காமல் அவதிப்பட்டனர். ஆனால் இது தற்காலிக பிரச்சனை தான், உடனே இந்த குறை நிவர்த்தி செய்யப்படும் என ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்தது

இந்த நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக சென்னையின் ஒருசில பகுதிகளில் வோடஃபோன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஹோம் லோகேஷன் ரிஜிஸ்டர் குறித்த பிரச்னைதான் இது என்று தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வோடஃபோன் நிறுவனம் தனது டுவிட்டரில் கூறியபோது,  "இதுவொரு தற்காலிக பிரச்னைதான். இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெறு வருகின்றன. மிக விரைவில் வோடஃபோன் சேவை சீரடையும்" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜியோவின் வருகைக்கு பின் மற்ற தனியார் தொலைத்தொடர்பு துறைகள் ஆட்டம் கண்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் எந்த நேரத்தில் தங்கள் இணைப்பு கட் ஆகுமோ என்ற பயத்துடனே உள்ளனர். மொத்தத்தில் பி.எஸ்.என்.எல் சிம் தான் பாதுகாப்பானது என்று பலர் நினைக்கும் வகையில் உள்ளது.