1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 8 நவம்பர் 2023 (10:33 IST)

சூரியனின் 'எக்ஸ்' கதிர்களை புகைப்படம் எடுத்த ஆதித்யா 'எல்-1 '-இஸ்ரோ தகவல்..!

aditya l 1
சூரியனின் எக்ஸ் கதிர்களை புகைப்படம் எடுத்து ஆதித்யா எல்1 அனுப்பி உள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.  
 
சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் கடந்த செப்டம்பர் மாதம் ஏவப்பட்ட நிலையில் அந்த விண்கலம் தற்போது விண்ணில் வெற்றிகரமாக  நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் ஆதித்யா எல் 1 என்ற விண்கலம்ம் சூரியனின் அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படம் எடுத்து அனுப்பி உள்ளதாகவும்  அந்த தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 
மேலும் பல ஆச்சரியமான தகவல்களை ஆதித்யா எல்1 அனுப்பும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 
Edited by Mahendran