திங்கள், 25 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2023 (12:44 IST)

'ஆதித்யா எல் 1 'தனது பணியைத் தொடங்கியது- இஸ்ரோ தகவல்

aditya l 1
சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 தனது பணியைத் தொடங்கியதாக இஸ்ரோ இன்று தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சமீபத்தில்,  சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிககரமான சந்திரனில் தரையிறக்கியது.

இதையடுத்து, இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா திட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், இந்த திட்டத்தின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

பூமியை 4 சுற்றுவட்டப்பாதைகளில் சுற்றி விரிவடைந்து சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான எல்-1 பகுதியில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்படும். இதற்கான சுற்றுவட்டப்பாதை உயர்த்துதலில் 4வது சுற்றுவட்டப்பாதைக்கு ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ சமீபத்தில்  தெரிவித்தது.

இந்த நிலையில்,  ஆதித்யா எல் 1 தனது பணியைத் தொடங்கியதாக இஸ்ரோ இன்று தெரிவித்துள்ளது.

அதில், சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் பூமிக்கு வெளிவட்டத்தில் அறிவியல் தரவுகளைச் சேகரிக்க  ஆரம்பித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

மேலும்,விண்கலத்தில் உள்ளா சென்சார் மூலமாக சேகரிக்கப்படும் தரவுகள், பூமிக்கு 50000கிமீ தொலைவுக்கு அப்பால் உள்ள துகள்கள் ஆய்வு செய்ய உதவும் என இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.