திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 14 ஜூன் 2021 (17:56 IST)

அதானியின் பங்குகள் கடும் வீழ்ச்சி.... ரூ.73,250 கோடிகள் இழப்பு !

இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரராக உள்ளவர் அதானி. இவரது அதானி குழும பங்குகள் இன்று பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியைச் சந்துள்ளது.

கொரொனா கால ஊரடங்கின்போது, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அதானியின் சொத்துகள் பல மடங்குகள் அதிகரித்தது.

இதனால் ஆசியாவில் 2 வது மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்தார். இந்நிலையில், இன்று 1 மணிநேரத்தில் அவரது அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இதனால் அவர்  ரூ.73,250 கோடியை இழந்துள்ளர்.  இதனால் அவர் அந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற இடத்திலிருந்து பின்னுக்குச் செல்வார் எனக் கூறப்படுகிறது. மேலும் அதானி குழுமத்தின் ரூ.43,500 பங்குகள் வைத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களில் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.