Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர் கொலை வழக்கு: நடிகர் தர்ஷன் அதிரடி கைது..!

Written By Mahendran
Updated: செவ்வாய், 11 ஜூன் 2024 (12:16 IST)
பெங்களூருவில் 2 நாட்களுக்கு முன், மருந்தகத்தில் வேலை பார்த்து வந்த ரேணுகா சுவாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் கன்னட திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
ரேணுகா சுவாமி  என்ற இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே 2 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தற்போது நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த விசாரணையில் தர்ஷனின் நெருங்கிய தோழிக்கு, ரேணுகா சுவாமி அடிக்கடி குறுந்தகவல்கள் அனுப்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
காட்டேரா, குருஷேத்ரா, கிராந்தி உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கன்னட சினிமாவில் பிரபலமாக அறியப்பட்டவர் தர்ஷன். மேலும் 2019 நாடாளுமன்ற தேர்தலில், நடிகை சுமலதாவுக்கு ஆதரவாக மாண்டியா தொகுதியில் தர்ஷன் பிரசாரம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
நடிகர் தர்ஷன் மைசூரில் உள்ள பண்ணை வீட்டில் இருந்த போது பெங்களுர் போலீசார் அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது.  
 
Edited by Mahendran
 

எல்லாம் காட்டு

ஆசாத் ஹிந்த் கட்சி!. புதிய கட்சி துவங்கும் சுபாஷ் சந்திர போஸின் பேரன்!..

லார் கிப்பான் குரங்கே எங்கே?.. சியான் விக்ரமுக்கு 3 நாள் கெடு!.. வனத்துறை அதிரடி!...

வி-வடிவ உடற்கட்டை உருவாக்குவது எப்படி: அர்னால்ட் ஸ்வார்ஸ்நெகரின் மகன் ஜோசப் பேனா அறிவுரை..

திமுக ஆட்சியின் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ரத்து!.. தவெக அரசு அதிரடி...

பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் முன்னிலையில் வந்தே மாதரம்.. பாராளுமன்றத்தில் இதுவே முதல்முறை..

அடுத்த கட்டுரையில்
Show comments