திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2024 (07:29 IST)

ஆஸ்கர் மேடையில் கிறிஸ் ராக்கை அறைந்த வில் ஸ்மித்… ஆதரவாக பேசிய கங்கனாவின் பதிவு இப்போது வைரல்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிட்ட கங்கனா ரனாவத் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்துள்ளார். இது கடந்த சில தினங்களாக சரச்சையைக் கிளப்பியுள்ளது.

கங்கனாவை அறைந்த பெண் காவலர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சர்ச்சை விவகாரத்தில் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய நடிகர் கிறிஸ் ராக் வில் ஸ்மித்தின் மனைவியை உருவ கேலி செய்வது போல பேச அப்போது அவரை மேடையிலேயே அறைந்தார் வில் ஸ்மித். அப்போதும் இதுபோல வில் ஸ்மித்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் எழுந்தன.

அப்போது கங்கனா “ஒரு முட்டாள் என்னுடைய தாய் அல்லது சகோதரியின் உடல்நலப் பிரச்சனையைப் பற்றி கேலி செய்து மற்ற முட்டாள்களை சிரிக்கவைத்தால் வில் ஸ்மித் செய்தது போலதான் நானும் செய்வேன்” என அவருக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். இந்நிலையில் இப்போது அவரின் அந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.