திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 8 ஜூன் 2024 (19:28 IST)

கங்கனாவை அறைந்த பெண்ணுக்கு வேலை தயாராக இருக்கிறது… பாலிவுட் பாடகர் ஆதரவு!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிட்ட கங்கனா ரனாவத் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்துள்ளார். இது கடந்த சில தினங்களாக சரச்சையைக் கிளப்பியுள்ளது.

கங்கனாவை அறைந்த பெண் காவலர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டு மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சர்ச்சை விவகாரத்தில் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி பாடகர்களில் ஒருவரான விஷால் தத்லானி ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார். அவர், “வன்முறையை நான் நிச்சயமாக ஆதரிப்பது இல்லை. ஆனால் அந்த பெண்ணின் தனிப்பட்ட கோபத்தை என்னால்  புரிந்து கொள்ள முடிகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவருக்கான வேலை தயாராக உள்ளது. ஜெய்ஹிந்த், ஜெய்ஜவான், ஜெய்கிசான்” என தெரிவித்துள்ளார்.