வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 30 மே 2019 (16:49 IST)

கணவனின் தலையை வெட்டி கையில் எடுத்து வந்த மனைவி

அசாம் மாநிலத்தில் பெண் ஒருவர் தன் கணவனை கொன்று தலையை எடுத்து கொண்டு வந்து போலீஸில் சரணடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் லக்கிம்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் 28ஆம் தேதியன்று அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அவர் கையில் ஒரு ஆணின் வெட்டப்பட்ட தலையை வைத்திருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அவரிடம் விசாரித்தபோது “என் கணவர் என்னை தினமும் அடித்து துன்புறுத்துவார். கோடாரியால் என் உடலில் காயங்களை ஏற்படுத்தியிருக்கிறார். அவரை விட்டு பிரிந்து விடலாம் என்று எண்ணினேன். ஆனால் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து அப்படி செய்யவில்லை. நான் இன்று அவரை கொல்லவில்லை என்றால் அவர் என்னை கொன்றிருப்பார்” என கூறினார்.

அவரிடமிருந்து தலையை கைப்பற்றிய போலீஸார் அவரை நீதிமன்ற விசாரணைக்காக காவலில் வைத்துள்ளனர்.