புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 30 மே 2019 (14:40 IST)

மோடி பதவியேற்பில் இதுதான் சாப்பாடா?

மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இதில் கலந்து கொள்ள வரும் முக்கிய விருந்தினர்களுக்காக இரண்டு நாட்களுக்கு முன்னால் இருந்தே சமையல் பணிகள் தொடங்கிவிட்டன.

இன்று மாலை 7 மணிக்கு தொடங்கும் விழாவில் சமோசா மற்றும் டீ வழங்கப்படுகிறது. பிரதமர் பதவியேற்பு முடிந்தவுடன் பிரம்மாண்ட விருந்து நடைபெறுகிறது. அதில் அனைத்து வகையான சைவ,அசைவ உணவுகளும் பறிமாற தயாராக உள்ளது. இவை மட்டுமல்லாமல் ஜனாதிபதி மாளிகையின் சிறப்பு உணவான ”டால் ரைசினா” என்ற உணவு அனைத்து விருந்தினர்களுக்கும் வழங்கப்படுகிறது.

இந்த உணவானது ஜனாதிபதி மாளிகையின் முதன்மை சமையல் கலைஞர் மெச்சின்ரா கஸ்தூரியால் அறிமுகப்படுத்தப்பட்டது.