திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 30 மே 2019 (10:23 IST)

டெல்லிக்கு போனா முதல்வராகதான் போவேன் – ஜெகன் மோகன் ரெட்டி

நடந்துமுடிந்த ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

ஆந்திரபிரதேச முதல்வராக இன்று ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கிறார். இந்த விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். பதவியேற்ற கையோடு டெல்லிக்கு செல்லும் ஜெகன் மோகன் ரெட்டி மாலை அங்கு நடக்கவிருக்கும் பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.

பிரதமரின் பதவியேற்பு விழாவிற்கு ஆந்திராவின் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொள்வது ஒய் எஸ் ஆர் காங்கிரசாருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.