குடிபோதையில் பிரசவம் பார்த்த டாக்டர்: தாயும் சேயும் பரிதாபமாய் உயிரிழந்த சோகம்
குஜராத்தில் டாக்டர் குடிபோதையில் பிரசவம் பார்த்ததில் தாயும் சேயும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் பொடாட் பகுதியை சேர்ந்த காமினி(22) என்ற இளம்பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது டியூட்டியில் இருந்த மருத்துவர் பரேஷ் லகானி என்பவர் தான் காமினிக்கு பிரசவம் பார்த்தார். கொடுமை என்னவென்றால் அந்த மருத்துவர் குடிபோதையில் இருந்துள்ளார். சற்று நேரத்தில் லகானியும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதுகுறித்து போலீஸார் சம்மந்தப்பட்ட மருத்துவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பொறுப்பற்ற மருத்துவரால் 2 உயிர்கள் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.